• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி..,

BySeenu

Jun 13, 2025

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் நேற்று விபத்துக்குள்ளானது.அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியின் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

ஏர் இந்தியா போயிங் 787-8 என்ற விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேரில் 241 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக கோவை மணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்ட் பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதில் கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் நிர்வாகிகள் அருள் ரமேஷ்,பூங்கோதை அருள் ரமேஷ் ,பள்ளி முதல்வர் பூணம் ஷயால் மற்றும் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.