• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விஷ்ணு விஷாலுக்கு உதவிய சிலம்பரசன்

.விஷ்ணு விஷால், ரெபா மோனிகா, கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், பார்வதி, கவுரவ் நாராயணன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்துள்ள படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். அஸ்வத் இசையில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 11ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’ படத்தில் சிலம்பரசன்இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.