அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் ஆணையம் பொது மக்களின் வாக்குகளை தவிர்க்கும், நோக்குடன் செயல் படுவதை கண்டித்தும் அதற்கு பாரதிய ஜனதா அரசு துணை போவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

கையெழுத்து இயக்கத்திற்கு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆ. சங்கர் அவர்கள் தலைமை வகித்தார். முதலில் கையெழுத்து இயக்கத்தை நகர தலைவர் மாமு. சிவகுமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டாரத் தலைவர்கள் கர்ணன் ,திருநாவு க்கரசு ,பாலகிருஷ்ணன் ,கங்கா துரை, மாவட்டத் துணைத் தலைவ ர்கள் ஏபிஎஸ் பழனிச்சாமி, கலைச் செல்வன், ராகவன், மாவட்ட பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊடக பிரிவு ஒருங்கி ணைப்பாளர் ராஜு, இளைஞர் காங்கிரஸ் ஜான் பிரிட்டோ, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் காங்கிரஸ் நிர்வாகிகள் நல்லதம்பி ,ராமசாமி, அன்பழகன் ,கந்தசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்தின் தில்லு முல்லு நடவடிக்கைகளான போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது மற்றும் வக்காளர்களை பட்டியலிருந்து நீக்குதல் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் எடுத்து கூறி கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பாஜக சார்பு நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.