விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக் கோவிலில் தாரஹார சஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும்.

அரக்கனை அழிக்காமல் புனிதானக மாற்றும் தத்துவத்தை விளக்குவதற்காக சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது.
தன்னை எதிர்த்த அரக்கர்களை அடியார்களாக ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியாக இவ் விழா கொண்டாடப்படுகிறது.
கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் கோவிலில் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முக்கிய விழாவான தாரஹார சஷ்டி விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக துலுக்கன் குறிச்சி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வதம் செய்வதற்காக மேளதாளத்துடன் வேல் வீதி உலாவாக கொண்டுவரப்பட்டு. கஜமுக சூரன், சிங்காசூரன் , தாரஹாசூரன், ஆகிய அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சூரபத்மன் என்று அரக்கனை வதம் செய்து மாமரத்தை இரண்டு துண்டாக்கி சேவல் கொடி ஆகவும், மயிலை வாகனமாக மாற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வாழை மர பாலசுப்ரமணியருக்கு பால் ,பன்னீர் ,அபிஷேகம் மலர் அபிஷேகம் நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.





