• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் துவக்கம்…

BySeenu

Jul 10, 2025

கோவை சுந்தராபுரம் பகுதியில் 70,000 சதுர அடியில் வீட்டு உபயோக பொருட்களுக்கான சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் துவக்க விழாவில் பிரபல நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை பிரியா வாரியர் பங்கேற்றனர்.

வானம் ஃபர்னிஷிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய சில்லறை விற்பனை முயற்சியாக சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் எனும் பிரம்மாண்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை மையம் கோவை சுந்தராபுரத்தில் துவங்கப்பட்டது.

70,000 சதுர அடியில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டைசன் மார்டின் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரபல திரைப்பட நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை பிரியா வாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் தரமான பொருட்களை வழங்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி ஜோர்ஜ் மார்ஷல் கூறுகையில்..,

சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் மையம் வீட்டு உபயோக தேவைகள் அனைத்துக்கும் ஒரே இடமாக திகழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான ஃபர்னிச்சர்ஸ், மெத்தைகள் மற்றும் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டி.வி. மொபைல்கள், லேப்டாப்கள் போன்ற மின் சாதன பொருட்கள் ஹோம் அப்ளையன்ஸ் வகைகளாக சமையலறை சாதனங்கள்,பிளாஸ்டிக் உபயோகப் பொருட்கள், டைல்ஸ், சானிட்டரி பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில், சிறந்த தரத்துடன் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக திறப்பு விழா சலுகையாக, ரூபாய் 25,000க்கும் அதிகமான கொள்முதல் செய்தால் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்குவதாக தெரிவித்த அவர் வாடிக்கையாளர்களுக்கான ஸ்லோகன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்க உள்ளதாக கூறினார்.