அரியலூர் மாவட்டம் , திருமானூர் ஒன்றியத்தில் , அமைந்துள்ள சர்வதேச அளவில் ஈரநிலங்களுக்கான ராம்சார் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் 2 வது மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. 11 சதுர கி.மீ பரப்பளவில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1998 ல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக சுற்றுலாப்பயணிகளுக்கான அடிப்படை வசதிகளான கொள்ளிடம் ஆற்றிலிருந்து வரும் நீர் குழாய்கள் வழியே கொண்டு வந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவில் உள்ளதனை


திருச்சிராப்பள்ளி வன மண்டலத்தின் வனப்பாதுகாவலர் மருத்துவர்.இரா. காஞ்சனா இந்திய வனப்பணி பார்வையிட்டார். உடன் மாவட்ட வனத்துறை அலுவலர் து.இளங்கோவன், கரைவெட்டி ஏரி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..




