மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகர் பகுதியில் செயல்படும் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் முதியோர் உற்சாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மூத்த மக்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அவர்களுக்கு பாத்திரங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. சமூக சேவகர் ஷியாம், இல்லத்தின் பொறுப்பாளர் முருகப்பன் கலந்து கொண்டனர்.
