கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள், கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக 7000 முதல் 9000 பேர் வரை நோயாளிகளாகவும் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

இங்கு நூற்றுக் கணக்கான தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக 120 பேர் தனியார் நிறுவனம் பதுகாவலர்கள், செக்யூரிட்டி இரவு, பகலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி சரவணப் பிரியா பணி சுமைகளை அதிகரித்தும், மேலும் பணிக்கு விடுமுறை எடுத்தால் அவர்களை பணி நீக்கம் செய்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.







; ?>)
; ?>)
; ?>)