• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தர்காவில் சந்தனக் கூடு..,

ByKalamegam Viswanathan

Oct 19, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்காலில் அமைந்துள்ள கனவாய் ஹழ்ரத் செய்யது வருசை இப்ராஹிம் சாஹிப் ஒலியுல்லாக் தர்காவில் பல நூறு வருடங்களாக நடைபெற்று வரும் வருடாந்திர உரூஸ் விழா நடைபெற்றது. .
இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முதல் நாளே பல்வேறு மாவட்டத்திலிருந்து ஏராளமான ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் உள்பட மற்ற மதத்தினரும் வந்திருந்தனர்.விழாவில் முக்கிய நிகழ்வான உரூஸ் என்ற சந்தனக்கூடுவிழா அதிகாலை தர்காகமிட்டிதலைவர் கணவாய்பிச்சை தலைமையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகுடத்தை சுமந்தபடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மீண்டும் தர்காவை வந்து அடைந்தனர். இதைத் தொடர்ந்து தர்காவில் அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டு வழிபட்டு மகிழ்ந்தனர்.தர்காவை சுற்றியுள்ள பகுதியில் உள்ள இடங்களில் வெளியூரிலிருந்து வந்த மக்கள் கூடாரம் அமைத்து சமையல் செய்து இவர்களுடன் வந்த மாற்று மதத்தினருக்கும் உணவளித்து மகிழ்ந்தனர்.
ஏழ்மை நீங்கவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு இங்கு பக்தர்கள் வருகை புரிந்தனர்.
முத்தவல்லி கணவாய்பிச்சை, செயலாளர் நாகூர்மீரான்,பொருளாளர் நாகூர்மீரான், துணைத்தலைவர் சேட்பஷீர், துணைச்செயலாளர் முகமதுயாசின், ஆலோசகர் முகமது மன்சூர் அலிநூரி ஆகியோர் விழாஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.