

தமிழ்நாட்டில் சிறைக்காவலர்களுக்கான ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் மற்ற காவலர்களுக்கும் ஊதிய உயர்த்தப்படும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியமும் விரைவில் உயர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
