• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு..,

ByKalamegam Viswanathan

Apr 17, 2025

பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக காவல் துறையின் நடவடிக்கைக்கு சத்குரு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தள பதிவில், “பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்த காவல் துறைக்கு எங்கள் உளமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக காவல் துறையின் அறிக்கையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஈஷா நிறுவனர் சத்குரு, பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், டாக்டர் சுதா மூர்த்தி உள்ளிட்ட பிரபலமானவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளைப் பயன்படுத்தி ‘மோசடி முதலீட்டு தளங்களை ஊக்குவிக்கும்’ வகையிலான பதிவுகள் சமூக ஊடக தளங்களில் பரவும் போக்கு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், மேலும் இது தொடர்பான சமூக ஊடக பதிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வலைத்தளங்களை சைபர் குற்றப்பிரிவினர் அடையாளம் கண்டு அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.