அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட் திருச்சி மண்டலம், சார்பில் த.குடிக்காடு, மற்றும் பூவந்திக் கொல்லை கிராமத்தில் 02 மகளிர் விடியல் பயண பேருந்துகள் வழித்தடத்தினை நீட்டிப்பு செய்து மற்றும் சுத்தமல்லி ஊராட்சியில் புறநகர் பேருந்து தடம் மாற்றம் செய்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்,கும்பகோணம் நிர்வாக இயக்குநர் க.தசரதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் டி.சதீஸ்குமார், ஒன்றிய திமுக செயலாளர்கள் தனவேல் , அண்ணா துரை , தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










