தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் நகராட்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் ரூ.287 இலட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை புதிய கட்டடம் கட்டும் பணியையும், பின்னர், எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ரூ.300 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கோவிந்த புரம் சாலை கி.மீ 1/4 – 5/0 வரை ஒரு வழித்தடத்திலிருந்து இடை வழித்தடமாக சாலை அகலப்படுத்துதல் பணியையும்,


தொடர்ந்து கயர்லாபாத் ஊராட்சி அரசு சிமெண்ட் ஆலை அருகில் ரூ.266 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – அயன் ஆத்தூர் – குடிசல் – தேளுர் சாலை (மா.மு – 1223) கி.மீ 3/6 – 5/6 சரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக சாலை அகலப்படுத்துதல் பணியையும், தொடர்ந்து ரூ.266 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – அயன் ஆத்தூர் – குடிசல் – தேளுர் சாலை கி.மீ 1/6 – 3/6 சரை இடை வழித் தடத்திலிருந்து இருவழித் தடமாக சாலை அகலப்படுத்துதல் பணிகள் என மொத்தம் ரூ.11.19 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,மாவட்ட கலெக்டர் பொ.இரத்தின சாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.


நிகழ்ச்சிகளில் அரியலூர் நகர செயலாளர் இரா.முருகேசன் , ஒன்றிய திமுக செயலாளர்கள் தெய்வ இளைய ராஜன், கோ அறிவழகன், நகர்மன்றத் தலைவர் சாந்தி , நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வடிவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, அரியலூர் நகர்மன்ற துணைத் தலைவர் தங்க.கலிய மூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டப்பொறியாளர் நடராஜன் மற்றும், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




