• Sat. May 11th, 2024

கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான்.., குழந்தைகள், பெண்கள், ஆண்கள் விழிப்புணர்வு மாரத்தானில் ஓட்டம்…

BySeenu

Feb 4, 2024

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரன் ஃபார் கேன்சர் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கோவை மாநகர பிரிவின் ஹோம் கார்ட்ஸ், டெபுட்டி ஏரியா கமாண்டர் தேன்மொழி ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தா. பின்னர் பேசிய அவர், இன்று ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுடன் இருப்பதோடு, வருடத்தின் அனைத்து நாட்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். மூதாதயர்களின் வாழ்வியல் நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். உணவு பழக்க வழக்கங்களை முறைபடுத்த வேண்டும். துரித உணவுகளை சாப்பிடாமல், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். போதுமான உடற் பயிற்சி அவசியம் என்பதனால், அதற்கு முக்கியத்துவம் அனைவரும் தர வேண்டும். உலக அளவில் புற்று நோய் அதிகரிப்பதனால், அதனை தவிர்க்கும் விதமாக, வாழ்வியல் நடைமுறைகளை மாற்ற வேண்டும். இதுபோன்ற முறையான விழிப்புணர்வு நாள்தோறும் ஏற்படுத்த வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தீவிர அக்கறை காட்ட வேண்டுமென அவர் தெரிவித்தார்.

இதில் 1 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 10 கிலோமீட்டர் ஆண்கள், 5 கிலோமீட்டர் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு 1 கிலோமீட்டர் என போட்டிகள் நடைபெற்றது. இதற்கான பிரிவில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மொத்தம் பரிசு தொகையாக ரூபாய் 68,000 வழங்கப்பட்டது. ஆண்கள் 10 கிலோ மீட்டர் பிரிவிற்கு முதல் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 7,500 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்பட்டது. 5 கிலோமீட்டர் பிரிவிற்கு முதல் பரிசாக ஆண், பெண், மாணவ மற்றும் மாணவியர்களுக்கு 4 பேருக்கும் தல 5 ஆயிரம் விகிதமாக 20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ஆண், பெண், மாணவ மற்றும் மாணவியர்களுக்கு 4 பேருக்கும் தல 4 ஆயிரம் விகிதமாக 12 ஆயிரமும்,
மூன்றாம் பரிசாக ஆண், பெண், மாணவ மற்றும் மாணவியர்களுக்கு 4 பேருக்கும் தல 2 ஆயிரம் விகிதமாக 8 ஆயிரமும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான 1 கிலோமீட்டர் போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 2,500, இரண்டாம் பரிசாக 2,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 1,000 வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *