• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உயிர்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி..

Byகாயத்ரி

Jul 26, 2022

இந்தியா கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றக்கூடிய வகையில் நாடுமுழுவதும் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கார்கில் விஜய் திவாஸ் முன்னிட்டு சண்டிகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்வர் பகவந்த் மான் இன்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடுமையான சூழலில் எல்லைகளில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களை வணங்குகிறேன். பணியின்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும். அவர்களின் தியாகத்திற்கு இது ஈடாகது. இருப்பினும் அவர்களின் குடும்ப பொருளாதார நெருக்கடி சந்திக்காமல் பார்த்துக் கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.