திண்டுக்கல் மாவட்டம், நந்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி, தோத்தம்பட்டி, மருனுத்து, கோட்டைப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் தனியார் தோட்டங்களில் சேவல் கட்டு சூதாட்டம் நடைபெற்ற வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அந்த வகையில் மஞ்ச நாயக்கன்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில் திருவிழா போல் சீரியல் விளக்குகள் அமைத்து 500 பேர் மேல் கூட்டமாக பெரிய அளவில் சேவல் கட்டு சூதாட்டம் நடைபெறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதில், சேவல் கால்களில் சிறிய கத்தி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. சேவல் கால்களில் கத்தி கட்டப்பட்டு இருப்பதால் ஒரு போட்டி 5 நிமிடத்திற்கு மேல் நடைபெறாது. 5 நிமிடத்தில் ஒரு சேவல் கண்டிப்பாக இறந்துவிடும். ஆனால், இந்த ஒரு போட்டிக்காக ஆயிரம் முதல் லட்சம் வரை சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் முழுவதும் நடைபெறும் சேவல் கட்டு சூதாட்டம் மூலம் கோடி கணக்கில் பணம் லாபம் பார்ப்பதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும் கள்ள தனமாக நடைபெறும் சேவல் கட்டு சூதாட்டத்திற்கு மின்சாரம் கள்ள தனமாக கொக்கி மூலம் திருடப்படுகிறது என்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத சேவல் கட்டு சூதாட்டம், சீட்டுக்கட்டு சூதாட்டம் போன்ற போட்டிகளை காவல்துறை தடுக்காமல் இருப்பதே முன்விரோதங்கள் ஏற்பட்டு பழிக்குப் பழி என்பது போன்ற கொலைகள் நடைபெறவும் வாய்ப்புள்ளது.
எனவே இது போன்ற சட்டவிரோத போட்டிகளை நடைபெறாமல் காவல்துறை பார்த்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.