• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை, டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் ரூ.1.44 லட்சம் கொள்ளை

BySeenu

Aug 26, 2024

பூம்புகார் பூட்டை உடைத்து ரூ.1.44 லட்சம் கொள்ளை. புற காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் பூட்டை உடைத்து ரூபாய் 1.44 லட்ச பணத்தை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை டவுன்ஹால் பகுதியில் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் அங்காடியான பூம்புகார் விற்பனையகம் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இரவு விற்பனை நிலையத்தை பூட்டி விட்டு சென்ற மேலாளர் ஆனந்தன் மறுநாள் விற்பனை நிலையத்தை திறப்பதற்கு வரும் போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் பூட்டை ரம்பத்தால் அறுத்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதும், பின்னர் ரூபாய் 1,44,877 பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்து உள்ளது.

இதனை அடுத்து பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ஆனந்தன் இந்த கொள்ளை சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.புகாரின் பேரில் உக்கடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டவுன்ஹால் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் புற காவல் நிலையத்திற்கு முன்பு இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.