• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மைல்கல்லிற்கு பூஜை செய்த சாலைப்பணியாளர்கள்..!

Byவிஷா

Oct 23, 2023

இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு, தோப்பூரில் உள்ள சாலைப்பணியாளர்கள் மைல்கல்லிற்கு பூஜை செய்து வழிபட்டனர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வத்தலக்குண்டு – கமுதி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலைபணியாளர்கள் தோப்பூர் பகுதியில் உள்ள மைல்கல்லிற்கு இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு திருநீறு, சந்தனம், குங்குமம், மாலை அணிவித்து சுண்டல், பொரிகடலை, தேங்காய், பழம், ஆகியவற்றை படையலிட்டனர். மேலும் சாலை பணிக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் சாலை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.