புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உடன் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா, கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.




