தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் யாக்கூப் தலைமையில் நடைபெற்றது,

இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 22ம் தேதி சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.