அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமிடம் தமிழ் பேரரசு கட்சி கோரிக்கையுள்ளதாவது, அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குறிச்சிகுளம் கிராமத்தில் இருபாலர் மாணவர்கள் சுமார் *400 பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இப் பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து உள்ளது. மேற்படி சுற்றுச் சுவரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்து தருவதுடன் பள்ளியில் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக இருந்து வருகிறது.
எனவே மாணவர்களுக்கு கழிப்பிட வசதியும் செய்து தர வேண்டுமாய் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் கு.முடிமன்னன் கோரிக்கை விடுத்துள்ளார்.