மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் திறக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலக் கால் அரசு மருத்துவமனையில் உள்ளே சித்தா பிரிவிற்காக தனி மருத்துவமனையை நேற்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சித்தா மருத்துவமனை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் சித்தா மருத்துவமனையின் அருகில் சுமார் 3.50 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை திறக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுகாதார வளாகத்தின் மேலே உள்ள சின்டெக்ஸ்ல் சுகாதார வளாகத்திற்கு தேவைப்படும் தண்ணீரை நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் ஆகையால் சுகாதார வளாகத்தை திறப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி மருத்துவமனையின் உள்ளே மேலக்கால் மருத்துவமனையின் உள்ளே உள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.