தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பெரம்பலுார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மு. ஞானமூர்த்தி எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்குக் கடந்த ஓர் ஆண்டாகத் தலைமை நிர்வாகி இல்லாமல் தமிழ்நாடு சர்க்கரை கழக பொதுமேலாளர் பொறுப்பு எடுத்துப் பார்த்து வருகிறார்.

என்றாலும் ஆலையின் நிர்வாகத்தை செம்மைப்படுத்தவும், செப்டம்பர் 25 ம் தேதி நடைபெற உள்ள பங்குத்தாரர்கள் பேரவைக் கூட்டத்தை அமைதியாக நடத்தவும் உடனடியாகத் தலைமை நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என அவர் கடித்தத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
