குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட தோவாளை அருள்மிகு பகவதி கொட்டாரம் திருக்கோயிலில் திருக்கோயில் நிதி ரூ. 10 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெறுகிறது. இதற்கான துவக்க விழா, இன்று காலை(ஏப்ரல்_7) 9.30 மணி அளவில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதர அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் ஸ்ரீகாரியம் சேர்மராஜா,
முன்னாள் தோவாளை பஞ்சாயத்து தலைவர் செழியன், துணைத்தலைவர் தாணு, ஆரால்வாய் மொழி திமுக பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், கழக பேச்சாளர் செல்வகுமார், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன்
கழக நிர்வாகிகள் சுரேஷ்குமார், செல்வின், சுரேஷ், ஆசை நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
