• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தென்மாவட்டங்களில்ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணம்

Byவிஷா

Dec 25, 2023

தென்மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கும் 6,000 ரூபாய் நிவாரண உதவி வங்கி கணக்கு மூலம் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு மூலம் ரூ.6,000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரொக்கப்பணம் வழங்கும் பணி முடிவடைந்த நிலையில், தென்மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது. இப்பணி முடிந்த பின், அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டை இல்லாதவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பணம் செலுத்தப்படவுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.