• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்

Byவிஷா

Nov 28, 2024

வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயலின் திடீர் திருப்பத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கைக்கு பதிலாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டு இருந்ததாகவும், அதன் பிறகு மிகவும் மெதுவாக, அதாவது இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, நவம்பர் 30 அல்லது அதற்கு மேல் தான் கரையை கடக்கும் அல்லது கரையை கடக்கும் முன்பே வலு குன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.