• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Byவிஷா

Nov 26, 2024

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று நவம்பர் 26ம் தேதி செவ்வாய்க் கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அவரகால மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையினை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன-
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 23.11.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன. ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., (94999 56205, 88006 56753)
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கவிதா ராமு, இ.ஆ.ப., (90032 97303)
கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.எ. ராமன், இ.ஆ.ப., (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
அதே நேரத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்திற்கு காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., (73388 50002)