புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கோத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் FLM திட்டத்தின் கீழ் வாசித்தல் திருவிழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியை இசபெல்லா தலைமையிலும் ஆசிரியர்கள் வெங்கடேசன், மகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் நாடகம் மூலமாகவும், தூய்மையான தமிழ் வார்த்தைகளை வாசித்தும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் பாரதியார், திருவள்ளூர் வடிவில் அமைக்கப்பட்ட வடிவத்தில் நின்று தமிழ் புலமை குறித்து எடுத்துரைத்தனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.










