தமிழ் சினிமா கடந்த 2020 முதல் கடந்த இரண்டு வருடங்களாக தொழில்ரீதியாக கடுமையான பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது 100% இருக்கைகளுடன் படங்களை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்த பின் வெளியான அண்ணாத்த, மாநாடு படங்கள் அதனதன் சக்திக்கு ஏற்ப திரையரங்குகளில் வசூலை குவித்தது அண்ணாத்த வணிகரீதியாக தோல்விப்படம் என்றாலும் 100% இருக்கை அனுமதி, அதிகமான திரையரங்குகளில் திரையிட்டதால் முதலுக்கு மோசமில்லாமல் சுமார் 40 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியது அதேபோன்று மாநாடு அள்ளிக் கொடுக்கவில்லை.
என்றாலும் தமிழக விலையான 12 கோடி ரூபாய் முதலீட்டை சேதாரமின்றி எடுக்க படம் ஓடினால் போதும் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி திரையரங்குகளில் திருவிழா கூட்டத்தை மாநாடு படம் நிகழ்த்தியது எல்லோருக்கும் லாபகரமான படமாக அமைந்தது இனி எல்லாம் ஜெயமே 2022 ஜனவரியில் RRR, வலிமை, ராதேஷ்யாம், பிப்ரவரியில் எதற்கும் துணிந்தவன், ஏப்ரலில் பீஸ்ட் என முதல் காலாண்டில் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் இருக்கும் என தமிழ்சினிமா கனவுலகில் பயணித்துக்கொண்டிருந்தது கொரோனா மூன்றாவது அலை ஓமைக்ரான் உருவில் கனவுகளை கலைத்துப்போட்டிருக்கிறது நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறை, கட்டுப்பாடு அடிப்படையில் திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திரையரங்குகள், நடிகர் நடிகைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை சிறு முதலீட்டு படங்கள் பாதிகப்படாது 30 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தயாரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்களில், முதல் வார முடிவிற்குள் முதலீட்டை வசூல் மூலம் பெற முயற்சிக்கும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு எதிராக திரை துறையினர் கடுமையான விமர்சனங்களை வெளியிடத் தொடங்குவார்கள் ஆனால் தமிழ்நாட்டில் விஜய், அஜீத்குமார் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே தலைநகரம் முதல் குக்கிராமம் வரை உள்ள திரையரங்குகளில் முதல் மூன்று நாட்கள், முதல் வாரம் முழுவதும் தியேட்டரில் உள்ள இருக்கைகளுக்கான டிக்கட்டுகளில்70% விற்பனை ஆகின்றது அது பின் 50%ம் அதற்கு குறைவாகவும் இருக்கும்.
இது தான் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் யதார்த்த நிலைமை நகரங்களில் இருக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் படம் பார்க்க வருகின்ற பார்வையாளர்களிடம் உணவுப்பொருட்கள், பார்க்கிங் இவற்றின் மூலம் அதிகபட்ச வருமானத்தை மறைமுகமாக பெறுகின்றன இதற்கு 50% இருக்கை அனுமதி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் மொத்தத்தில் ஆண்டின் தொடக்கத்தில் தியேட்டர்களில் 50% இருக்கை அனுமதி என்கிற கட்டுப்பாடு அதிர்ச்சியளிக்கலாம் ஆனால் இதனை காரணமாக வைத்து தயாரிப்பு செலவு, நடிகர் நடிகைகளின் சம்பளத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி ஒழுங்குபடுத்தும் முயற்சியை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டால் தமிழ் சினிமாவில் மூலதன முடக்கம், தொடர்நஷ்டம் என்பது தவிர்க்கப்படலாம் என்பதே திரைப்பட வணிக ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.