• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவிசந்திரன் இன்று பரோலில் வெளிவந்தார்

Byகுமார்

Nov 16, 2021

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க ரவிசந்திரன் தாயார் முதல்வருக்கு மனு அளித்தார்.

தொடர்ந்து ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று திங்கட்கிழமை காலை அல்லது மாலையில் ரவிச்சந்திரன் வெளியே வருவார் என தெரிவிக்கபட்டிருந்த நிலையில்,
போதிய பாதுகாப்பு வழங்க இயலாத காரணத்தால் இரண்டாம் நாளான இன்று மாலை ரவிச்சந்திரன் பரோலில் வெளிவந்தவர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து ரவிச்சந்திரன் குடும்பத்தினரை விடுத்து மற்ற நபர்களை சந்திக்க கூடாது, பொது கூட்டங்களில் பங்கேற்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.