• Sat. Oct 5th, 2024

“ரங்கோலி” திரை விமர்சனம்

Byஜெ.துரை

Sep 1, 2023

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்து அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஹமரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ரங்கோலி.

பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா,ஆடுகளம் முருகதாஸ் உட்பட மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையையும், அவர்களது குடும்பங்களையும் சுற்றிய கதையாக அமைந்துள்ளது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.

இப்படம் ஒரு குடும்பப்படமாகவும் இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாகவும் உள்ளது.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் அறிமுக நாயகனாக தனது நடிப்பில் அசத்தியுள்ளார்.

பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் காட்சி பலரது பள்ளி வாழ்க்கையை ஞாபகபடுத்துவதோடு பெரும் எதிர்பார்ப்பையும் நம்மிடையே ஏற்படுத்தியுள்ளர் இயக்குனர் வாலி மோகன்தாஸ்.

படத்தின் பாடல்களை மீண்டும், மீண்டும் கேட்க தோன்றுகின்ற வகையில் இசையமைத்துள்ளார் சுந்தரமூர்த்தி.

பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா,ஆடுகளம் முருகதாஸ் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் கடப்பா போன்ற பகுதிகளில் சிறப்பாக படபிடிப்பை ஒளிப்பதிவு செய்துள்ளார் மருதநாயகம்.

மொத்தத்தில் ரங்கோலி குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *