

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷாபந்தன் நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன். ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனை செய்து புனித கயிறு கட்டுவது வழக்கம்.
இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். சகோதரர்களின் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பின்பு மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். பதிலுக்கு சகோதரர்கள், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாக சகோதரர்கள், சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.