திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில்பொதுமக்கள் சுற்றுலா பயணிகள்,மாணவ மாணவிகள் பயன்பாட்டுக்கு சுரங்க பாதை அமைக்கப்பட வேண்டும். என்ற ரெயில்வே துறைமத்திய இணை அமைச்சருக்கு கடிதம் எழுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்

திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் கடந்த1876 ஆண்டில்இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில்வே நிலையம் வழியாக தென் மாவட்டங்களை சார்ந்த நெல்லை, தூத்துக்குடி ,திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமாரி, திருவனந்தபுரம் ,கொல்லம் ,குருவாயூர், பழனி, சென்னை ,பெங்களூர், மும்பை, மைசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன
அடிப்படை வசதிஇல்லாத நிலை
கடந்த 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த ரெயில்வே நிலையத்தில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி ,மழை மற்றும் வெயில் காலங்களில் நிற்பதற்கு மேல் கூரை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்தது. மேலும் ரெயிலை விட்டு இறங்கியதும்தண்டவாளங்களை கடந்து செல்லக்கூடிய அவல நிலையும் இருந்து வந்தது. அதனால் ரெயில் பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாய் வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமார் 4 கோடியில் அடிப்படை வசதிகள் மற்றும் நடை மேம்பாலம் வசதியுடன் முன்மாதிரி ரெயில்வே நிலையமாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்து வருவதால் இந்த ரெயில்வே நிலையமானது மதுரைக்கு அடுத்த படியாக முனையமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையிலும் அகல இரட்டை ரெயில்வே பாதை உருவானதால் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பாதை அடைக்கப்பட்டு விட்டது. இதனால்உள்ளூர் பொதுமக்கள் , வெளியூர்பக்தர்கள் சுற்றுலா பயணிகள்மற்றும் மாணவ மாணவிகள் சுமார் 2. கி.மீ. சுற்றி வர வேண்டியஅவலம் இருந்து வருகிறது
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ .வலியுறுத்தல்;
இது தொடர்பாகமத்திய ரெயில்வே நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணாவிற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும்,திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கடிதம் எழுதினார். அதில்திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் நடந்து செல்வோர் நீண்ட தூரம் கடந்துமேம்பாலத்தில் செல்ல சிரமப்படுகின்றனர் .எனவே ரெயில் நிலையம் பகுதியில்மக்கள் பாதுகாப்புடன் சென்று வருவதற்கு வசதியாகசுரங்க பாதை அமைத்திடவேண்டும். இதே போலசிந்தாமணி பகுதியில் ரெயில்வே கடவுப்பாதைமூடப்படுவதால்போக்குவரத்து விரிசல் பட்டு அப்பகுதி மக்கள் அவதிப்படுவதை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
மத்திய அமைச்சர் பதில்;
இந்த நிலையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.விற்குமத்திய ரயில்வே நீர் வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணா பதில் கடிதம் அனுப்பினார். அதில் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்திற்கு அருகேசுரங்கப்பாதை,மதுரை சிந்தாமணி ரெயில் கடவுப்பாதை பகுதியில்மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய தங்களதுகடிதம் பரிசீலிக்கப்பட்டது.திருப்பரங்குன்றத்தில் குறிப்பிட்டுள்ளஇடத்தில் சுரங்கப்பாதைஅமைக்க சாத்தியமில்லை.இருப்பினும் அங்கு நடை மேம்பாலம் கட்டுவதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டு வருகிறது.முன்னுரிமை அடிப்படையில் சாத்திய கூறுகளை ஆராய்ந்து பணி மேற்கொள்ளப்படும்.இதே போல சிந்தாமணி கடவுப்பாதையில் ரெயில்வேமேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைப்பதற்கான தொழில் நுட்ப சாத்தியக்கூறு குறித்து விரிவான தொட்ட அறிக்கை தயாரிக்கும் பணியின் மேற்கொள்ளப்படும். உறுதி செய்யப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலும்மத்திய ரெயில்வே துறை இணை அமைச்சரை தொடர்ந்து வலியுறுத்துவேன் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.






