ஸ்ரீ ஆர்ஆர் மூவிஸ் – நகரத்தார் டாக்டர்.ராஜா (எ) ராமநாதன் தயாரித்து
ஏ.பி.ராஜீவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்
“ராஜா வீட்டு கன்னுக்குட்டி”

இத்திரைப்படத்தில் ஆதிக் சிலம்பரசன், தம்பி சிவன், காயத்ரி ரேமா, அனு கிருஷ்ணா, வர்ஷிதா, விஜய் டிவி சரத், மனோகர், பெருமாத்தா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனது கிராமத்தில் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றி தெரியும் அறிமுக நாயகன் ஆதிக் சிலம்பரசன். அதே கிராமத்தில் பால் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் காயத்ரி ரெமாவுடன் காதல் மலர்கிறது.

இந்நிலையில் திடீரென சிங்கப்பூரிலிருந்து நாயகன் தந்தை தனது சொந்த கிராமத்திற்கு வந்து தனது மகனான ஆதித் சிலம்பரசனை சிங்கப்பூர் அழைத்து செல்கிறார்.
இந் நிலையில் தனது காதலி காயத்ரி ரெமாவுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி விடுகிறது.
மீண்டும் சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த ஆதிக் சிலம்பரசன், அவரது நண்பரான தம்பி சிவனின் தங்கை வர்ஷிதாவை காதலித்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.

இந்நிலையில் தனது முன்னாள் காதலி காயத்ரி ரமாவின் மகன் இறந்து விடுகிறார்.
அடுத்த சில நாட்களில் அவரது கணவரும் இறந்து விடுகிறார்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நாயகன் ஆதிக் சிலம்பரசன் தன்னந்தனியாக யாரும் இல்லாமல் தவிக்கும் முன்னாள் காதலியை சந்தித்தாரா?
இதனால் இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்த
மனைவி வர்ஷிதா என்ன முடிவு எடுத்தார் ? இறந்து போன அந்த முன்னாள் காதலியின் குழந்தை யார் ? இதுதான் படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் ஆதிக் சிலம்பரசன், கிராமத்து இளைஞர் சாயல் கொண்ட முகமாகவும் மிகவும் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்.
நண்பனின் இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு பக்கபலமாக இருக்கும் உணர்வுபூர்வமான ஒரு நண்பனின் உணர்ச்சியை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்,
தம்பி சிவன், மற்றும் படத்தின் நாயகிகளாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, வர்ஷிதா, அனு கிருஷ்ணா ஆகியோர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.
விஜய் டிவி சரத் அவ்வப்போது வந்து பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்.
மற்ற கதாபாத்திரத்தில் வலம் வரும் மனோகர் மற்றும் பெருமத்தா தங்களது பணியை குறைவில்லாமல் செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் தளபதி டைசன் ராஜ், படத்தின் பின்னணி இசை சுமாராக இருந்தாலும் படத்தின் பாடல்களான, சிங்காரியே கனவு நெசந்தாண்டி, கற்கண்டு மழையே மழையே,கூற சேலை தருவியா கிறுக்கா, ஆகிய மூன்று பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது.
கிராமத்துக் காட்சிகளை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்,
ஒளிப்பதிவாளர் ஹரிகாந்த். ஒரு கிராமத்து காதல் கதையை உணர்வு பூர்வமாகவும், எதார்த்தமாகவும், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் சொல்லி இருக்கிறார்,
இயக்குநர் ஏ.பி.ராஜீவ்.
மொத்தத்தில்,
“ராஜா வீட்டு கன்னுக்குட்டி”
தித்திப்பு.