• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கோடை வெப்பத்தை தனித்த மழை

ByKalamegam Viswanathan

Apr 21, 2023

மதுரை மாவட்டத்தில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், மாலை பெய்த மழை சற்று ஆறுதல் அளித்தது.
மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக காலை முதல் மாலை 6 மணி வரை கடும் வெப்பம் நிலவியது.இரவிலும் கடும் வெப்பம் நிலவியதால், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.மதுரை மாவட்டத்தில் உள்ள பல கண்மாய்களில் கடும் வெப்பத்தால் நீர் நிலை வெகுவாக குறைந்து வருகிறதாம்.கடும் வெப்பத்தை சமாளிக்க பொது மக்கள் கூழ், தர்பூசணி பழம், இளநீர், மோர் மற்றும் குளிர்பானங்களை விரும்பி அருந்தியுள்ளனர்.
மதுரை நகரில் ரூ. 30 விற்பனை செய்யப்பட்ட இளநீரானது, கடுமையான வெப்பத்தால் ரூ. 60, 70 என, உயர்ந்துள்ளது.

இந்த வெப்பம் நீடித்தால், பல கிராமங்களில் குடிநீர் தட்டுபாடுகள் வரலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மதுரை நகரில் கடுமையான வெப்பத்தால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.வெப்பத்தை தணிக்கும் வகையில், மதுரை நகரில் பல இடங்களில் மழை பெய்தது.இன்று பிற்பகல் முதல் வாரம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இருந்த போதிலும் , வெப்பம் குறையவில்லை.