வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரத்தில் தெரு நாய்களுக்கான வெறி நாய் தடுப்பூசி போடும் பணி துவக்கம் பேர்ணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளில் அதிக அளவில் தெருக்கள் உள்ளன சாலைகளில் சுற்றி திரியும் வெறிநாய்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வேலூர் மாவட்டம் கால்நடைத்துறை தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் கட்டமாக துவங்கப்பட்டது.

அப்போது உடன் நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜுபேர் ரஹ்மத் நகராட்சி ஆணையாளர் வேலவன் நகராட்சி எஸ்ஐ உமாசங்கர் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் உடனிருந்தனர்