செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் பொதுமக்களை பாதுகாக்க தாம்பரம் மாநகராட்சி அதிரடி திட்டம் தெரு நாய்களை விரட்டி விரட்டி பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் தினமும் நூறு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு ஒரு நாளைக்கு 1000 ஏ ஆர் வி தடுப்பூசி என 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது

இந்தத் திட்டத்தால் நாய்களுக்கு நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் நோயை தடுக்க முடியும்.
நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் பரவுவதையும் தடுக்கலாம் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்துமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை அலுவலக நாட்களில் 50 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவிப்புவிடுத்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் மண்டல வாரியாக 10 தடுப்பூசி செலுத்தும் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் இரண்டு கால்நடை மருத்துவர்கள் இரண்டு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் இரண்டு வாகன ஓட்டுனர்கள் ஐந்து நாய் பிடிக்கும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளனர் மொத்தம் 125 நபர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (Rabies Vaccination) செலுத்தும் வகையில் அஸ்தினாபுரத்தில் நடைபெற்ற வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆணையாளர் சீ.பாலசந்தர் தொடங்கி வைத்து, தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி சரண்யா, சுகாதாரத்துறை அலுவலர் ஆய்வாளர்கள் திமுக நிர்வாகிகள் ரமேஷ், நாகராஜ், மதுரை வீரன், டில்லி பாபு, யோகேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.