• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

விடுப்பில் வெளியே வந்த புழல் சிறை கைதி சூலூரில் சிக்கினார்!

BySeenu

Jan 22, 2025

கோவை: சென்னை புழல் சிறையிலிருந்து விடுப்பில் வந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி ஜாகிர் உசேன், சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் போஸ்கோ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஆயுள் தண்டனை பெற்ற ஜாகிர் உசேன், தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பில் வந்து தலைமறைவாகி இருந்தார். மேலும் சூலூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் படி நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக மூன்று நாட்கள் மட்டுமே காவல் நிலையத்தில் வந்த கையெழுத்திட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து
சூலூர் போலீசார் 6 மாத காலம் தீவிரமாக தேடி வந்த நிலையில், கோவை காந்திபுரத்தில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். பின்னர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.