• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழுதாகி நின்ற அரசு பேருந்து…தள்ளு தள்ளு தள்ளு…

Byகுமார்

Dec 11, 2021

மதுரையில் முக்கிய சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; போக்குவரத்து காவலர் உதவியுடன் பேருந்தை தள்ளி இயக்கிய அவலம்

மதுரையில் மொத்தமாக 727 மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பெருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்து திடீரென பிரேக் டவுன் ஆனதால் சாலையில் நின்றதும்.

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதை உணர்ந்த போக்குவரத்து காவலர், நடத்துனர் மற்றும் பாதசாரிகள் உதவியுடன் பேருந்த தள்ளிவிட்டு பேருந்தை இயக்க உதவி செய்ததை அங்கிருந்த பொதுமக்கள் வேதனையுடன் கடந்து சென்றனர். மேலும் மாநகரில் இயக்கப்படும் பேருந்துகள் தொடர்ச்சியாக இதுபோன்று அடிக்கடி பழுதாகி சாலையில் நிற்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.