கோவையில் கனமழை காரணமாக லங்கா கார்னர் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இரண்டு மணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் கோவை மாநகர் பகுதியில் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஆறாக ஓடியது.


இந்த நிலையில் கோவை ரயில் நிலையம், லங்கா கார்னர், உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் நீதிமன்றம் அருகே மழைநீர் குளம் போல் தேங்கியதால் பெட்ரோல் பங்க் உள்ளே மழைநீர் சூழ்ந்து உள்ளது.


மேலும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டுகள் மிகவும் அவதி அடைந்தனர். இதனால் கோவை மாநகர் பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இன்று விடுமுறை நாட்கள் என்பதால் திடீர் மழை காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.










