• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை 20 மணி 40 நிமிடத்தில் பேனரில் எழுதி சாதனை செய்த தமிழாசிரியைக்கு பொதுமக்கள் பாராட்டு..,

ByKalamegam Viswanathan

Mar 23, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன் இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார் தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர் தொல்காப்பிய நூல்கள் பற்றிய ஆய்வுகளை குழுவாக சேர்ந்து மேற்கொண்டு வருகிறார். இவரது கவிதைகள் இலங்கை வானொலியில் ஆறுக்கும் மேற்பட்ட முறைகள் வாசிக்கப்பட்டுள்ளது.

இவர் சியாம் ஆர்ட் அகடாமி மூலம் தமிழ் ஆர்வலர்களுடன் சேர்ந்து உலக சாதனை படைப்பதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். அந்த வகையில் தொல்காப்பியரின் உருவப்படம் பொறித்த பேனரில் தொல்காப்பியத்தின் 1602 நூற்பாக்களை 20 மணி நேரம் 40 நிமிடத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தனியாக கவிதை நூல் வெளியிடுவது தனது ஆசை என்று கூறும் இவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை வளர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இது குறித்து இவர் கூறுகையில், மதுரை மாவட்டம் தென்கரையில் குடியிருந்து வருகிறேன். அதிகபேருக்கு தொல்காப்பியர் இருந்தார் என்பது தெரியும். ஆனால் அவரின் உருவம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இன்றைய தலைமுறையினர் பார்த்ததும் கிடையாது முதல் முறையாக சியாம் ஆர்ட் அகாடமி மூலம் தொல்காப்பியர் எப்படி இருப்பார் என்று ஒரு இமேஜ் கொடுத்தார்கள். அவர்களும் நாங்களும் அதாவது தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து தொல்காப்பியர் உருவப்படம் வரைந்து அவருக்குள்ளேயே தொல்காப்பியரின் நூற்பாக்களை எழுதலாம் என்று நினைத்து ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இது ஒரு குழுவாக சேர்ந்து செய்யப்பட்ட செயல்பாடு தான் 45 பேர் சேர்ந்து குழுவாக பண்ணியிருக்கிறோம்.இதில் என்னோட முயற்சியின்னு எடுத்துக்கிட்டா 20 மணி நேரம் 40 நிமிஷத்திலேயே 1602 நூற்பாக்களை இந்த உருவப்படத்துக்குள்ள வரைஞ்சு இருக்கேன் நான் ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன்.

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை அதோட முதல் முயற்சி தான் இது. இதைத் தாண்டி நான் ஒரு கவிஞரும் கூட நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன் என்னுடைய எதிர்கால ஆசை அப்படின்னு பார்த்தா தனியா ஒரு கவிதை புத்தகம் வெளியிடனும் அப்படின்றதுதான் பெரிய ஆசையா உள்ளது.

முள்ளிபள்ளத்தில் உள்ள இல்லத்தில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தருகிறேன். கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் வளர்க்கணும்.இந்த தொல்காப்பியத்தோட சிறப்பு என்னன்னா முதல் முதலில் தோன்றிய இலக்கண நூல் எதுன்னு பார்த்தா அகத்தியன் தான். ஆனா அதுல சரியான நூட்பாக்களும் பாடல்களும் நமக்கு கிடைக்கப்பெறவில்லை.

ஆனா எழுத்துப்பூர்வமா கிடைச்ச முதல் இலக்கண நூல் அப்படின்னு பார்த்தா நம்ம தொல்காப்பியத்தை மட்டும் தான் சொல்ல முடியும். ஆனா இப்ப இருக்க காலகட்டத்தில் பார்த்தா இலக்கணமும் தொல்காப்பியமும் மட்டும்தான்னு முடிச்சுக்கிறாங்க. அதை சார்ந்து நிறைய விஷயங்கள் கத்துக்கணும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும் என்பதற்காகத்தான் இந்த தொல்காப்பியர் படமும் அதற்குள் எழுதப்பட்ட எழுத்துக்களும்.

இது தவிர இலங்கை வானொலியில் 6. 7 முறை எனது கவிதைகள் வாசிக்கப்பட்டு இருக்கு நான் பட்டப் படிப்பு படித்த பின்பு தான் தமிழ் மேல் ஒரு தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு தான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன் இதற்கு எனது குடும்பத்தினர் குறிப்பாக எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருப்பது எனக்கு பெருமைக்குரியதாக உள்ளது. இன்னும் தமிழ் மொழி நமது மாணவர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். அதற்கு என்ன மாதிரியான உதவிகள் இருந்தாலும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் .

ஆகையால் பெற்றோர்களாகிய நீங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மொழிக்கு உயிர் கொடுப்பது முக்கியமல்ல புத்துயிர் கொடுக்க வேண்டும். ஆகையால் சேர்ந்து தமிழ் மொழியை வளர்ப்போம் நன்றி இவ்வாறு கூறினார்.