• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Sep 22, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பு மேம்பாலத்தின் நடுவே மூன்று இடங்களில் சாலையில் நடுவே பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் செல்லும் போது விபத்து ஏற்படுவதாக புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் விரிசலை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே மேம்பாலம் காட்டியதில் பல்வேறு குறைபாடுகள் இருந்து வரும் நிலையில் தற்போது மேம்பாலத்தின் நடுவில் விமர்சல் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.