• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா..,

BySeenu

Jul 20, 2025

கோவை, ஜூலை 19, 2025 : கோவையின் பிரமாண்ட ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையமான புரோஜோன் மால், தனது 8-வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக கோவை மக்களுக்கு தனித்துவமான ஷாப்பிங் அனுபவங்களை வழங்கி வரும் புரோஜோன் மாலை பெருமைப்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் #ProzoneTurning8 என்ற ஹேஷ்டேக் மக்கள் ட்ரெண்ட்டாகி வருகின்றனர்.

இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, மாலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனையாகும் பிரபல பிராண்டுகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புரோஜோன் மாலில் விளையாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு விளையாடி பொழுதைக் கழிக்க எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை. மேலும், முற்றிலும் இலவசமாக இந்தச் சேவையை புரோஜோன் மால் வழங்கி வருகிறது. இங்கு விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ஸ்கிராட்ச் கார்டுகள் மூலமாக உடனடி பரிசுகளை வெல்லவும் வாடிக்கையாளர்கள் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இந்த மாலில் முதல் முறையாக, 360° இம்மர்சிவ் டோம் தியேட்டர் எனும் புதுமையான தொழில்நுட்பத் தியேட்டர் அறிமுகமாகியுள்ளது. இது குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் புதுமையான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 18 வரை இந்த தியேட்டர் வாடிக்கையாளர்களாகத் திறந்து இருக்கும். தங்களின் நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவு செய்ய மகிழ்ச்சியின் மையமான புரோஜோன் மாலுக்கு வாருங்கள் – கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள், சிறந்த ஷாப்பிங் அனுபவத்தைப் பெறுங்கள்!