அரியலூர் மாவட்டம், திருமானூரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த தினம் , மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் எம் சந்திரசேகர், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பூண்டி சந்தானம் ,மூத்த தலைவர் சீமான் மூப்பனார், மாவட்ட ஓபிசி அணிமாவட்ட தலைவர் சங்கர்வேல், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்கே எஸ் புகழ் , மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ஏபி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்துராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு,நன்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.தொடர்ந்து, திருமானூர் ஊராட்சி பணி புரியும் 50 தூய்மை பணியாளருக்கு,மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் இலவச புடவை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர தலைவர் வினோத் வட்டார தலைவர் கங்காதுரை , இளைஞர் காங்கிரஸ் ராஜூ மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.