மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள சேவாலயம் இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு மற்றும் விடுதிக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் விழா ஆடிட்டர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

சமூக சேவகி ஆடிட்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியர் தென்னவன், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில், சமூக ஆர்வலர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விபத்தில்லா, மாசில்லா தீபாவளி கொண்டாடும் விதம் மற்றும் தீபாவளி வாழ்த்துக்களை வழங்கினர். அனைத்து குழந்தைகளுக்கும் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.
சேவாலயம் விடுதிக்கு சமையல் பாத்திரங்கள், நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் சேவாலயம் மாணவர்கள் கலந்து கொண்டனர். விடுதி துணை காப்பாளர் அறிவழகன் நன்றி கூறினார்.