புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்பின்படி ஏற்கனவே இருந்த 100 நாள் வேலைத்திட்ட பணியை 125 நாட்களுக்கு செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்த பிறகு அந்த அறிவிப்பையும் நூறு நாள் வேலைத்திட்ட பணிகளையும் சீர்குலைக்கும் விதமாக தமிழகத்தில் அரசாளும் திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் விரைவில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முழக்கங்களையும் முன்வைத்து இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காலை முதல் மாலை வரை நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்புறமும் கூட்டணியின் தலைமை வழிகாட்டுதலின்படி ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்புறம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் நெவளிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அதேபோலவே ஆவுடையார் கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, விராலிமலை, அரிமளம், திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட 13 ஒன்றியங்களிலும் என்று எந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுக அரசின் தகிடுதத்தங்களையும் செயல்படாமல் இருப்பதையும் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் குற்றம் சுமத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






