• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம்..,

Byரீகன்

Aug 21, 2025

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் சிறுகமணி கிழக்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட காவல்கார பாளையம் பனைமந்தை தெருவில் வீடு கட்டி குடியிருந்து வரும் 11 விவசாய தொழிலாளர் குடும்பங்கள் குடிமனை பட்டா கேட்டு கடத்த 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து மனு கொடுத்தும் வருவாய்துறை அலுவலர்கள் விசாரணை செய்து 9 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் இன்று ஸ்ரீரங்கம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் மாரியப்பன் பேசினார். இதில் மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணா, ஒன்றிய தலைவர் நடராஜன், ஒன்றிய செயலாளர் ஜோதிமுருகன், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், சுப்ரமணி செல்வராஜ் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தாசில்தார் செல்வ கணேஷ் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் அனைத்து பட்டாக்களும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளன ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.