• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆளும் மத்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை முன் ஆர்பாட்டம்..

Byகாயத்ரி

Oct 6, 2022

மத்திய அரசை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உபா சட்டத்தையும், என்.ஐ.ஏ. அமைப்பையும் பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் கவர்னரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் திரளாகபங்கேற்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.