கோவை, நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான கொச்சி சாலையில் ஆறு சுங்கச்சாவடிகள் இருந்தன. இதில் மதுக்கரை தவிர மற்ற ஐந்து சுங்கச் சாவடிகளின் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. ஆனால் மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இதற்கு இடையே அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் மதுக்கரை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் நிலை இருந்தது. இதற்காக அவர்கள் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மதுக்கரை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்கள் உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், அல்லது கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் அந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் வாகன உரிமையாளர்கள் திடீர் மதுக்கரை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதுபோல் மதுக்கரை சுங்கச்சாவடியில் உள்ளூர் குடியிருப்பு வாசிகள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதால் கூடுதல் செலவு ஆகிறது. எனவே கட்டணம் வசூலிப்பது ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
இது குறித்து தகவலின் பேரில் மதுக்கரை காவல் துறையினர் விரைந்து சென்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது அவர்களின் கோரிக்கை எழுதிக் கொடுத்து தீர்வு காணுங்கள் என்றும் அறிவுறுத்தினார். இதை அடுத்து அவர்கள் கலந்து கொண்டனர்.