தமிழ்நாடு கால்நடை வளப்போர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளரை சமூக வலைதளங்களில் மற்றொரு ஜாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து புகார் ஒன்றை அளித்துள்ளார் அந்த புகாரியில் எங்களது தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நல சங்க பொதுச் செயலாளர் சத்தியம் சரவணன் அவர்களை இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய மாயன் மகன் திருமுருகன் என்பவர் சமூக வலைதளங்களில் (தாழ்த்தப்பட்ட ) மற்றொரு ஜாதியின் பெயரை பயன்படுத்தி இவன் அந்த ஜாதியை சேர்ந்தவன் நம்மளை காப்பாற்ற மாட்டான் என கூறி அசிங்கமாக பேசி சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டுள்ளார் மேலும் திருமுருகன் என்பவர் இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் கிருஷ்ணன் கோவில் ஒன்று கட்டி உள்ளதாகவும் அதற்கு நன்கொடை வேண்டுமென தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்களிம் மற்றும் தலைவரிடம் நன்கொடை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுபோக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஸ்டேட் வங்கியில் 2000 ரூபாய் கட்டினால் விவசாயிகள் இறந்தால் 40 லட்ச ரூபாய் கிடைக்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்தி எல் ஐ சி மூலம் பணம் பெற்று தருவதாக அதிகமாக பண வசூல் செய்ததாகவும், திருமுருகன் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையிலும், இதெல்லாம் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நேரடியாக பலனடையை செய்தல் கால் புணர்ச்சி காரணமாக இது போன்ற ஆடியோக்களை வெளியிட்டு வருவதாக கூறி புகார் அளித்தனர் அவரை கைது செய்ய வலியுறுத்தி இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் முன்பு நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனா பீபி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றோம். இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு அழைக்க முடியாத சூழ்நிலை எங்கள் சூழ்நிலை புரிந்து கொள்ளுங்கள் என போராட்டக்காரர்களிடம் காவல்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.